ஆதரவாளர்கள்

Friday, August 26, 2016

மரியாதைக்குரிய பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்,

மரியாதைக்குரிய பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்,

        உங்களுடன் எங்கள் பிள்ளைகள் நலனுக்காக சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்

        தினமும் நாளேடுகளைப் புரட்டும் நீங்கள் அறியாததையோ படிக்காத ஒன்றையோ பார்க்காத ஒன்றினையோ உங்களுடன் பேசவில்லை நீங்கள் அன்றாடம் அறிந்த செய்திகள் தான்.

அதாவது ,

Tuesday, August 9, 2016

"காகிதத்தில் ஒரு ஆயுதம்"

"காகிதத்தில் ஒரு ஆயுதம்"

தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் நமது அனைத்து தேவைகளுக்கும் பிரசனைகளின் தீர்வுக்கும் தகவல் பெறுவது எப்படி?

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை 10.30 மணிக்கு கேப்டன் நியூஸ் தொலைக்காட்ச்சியில்  


Friday, June 24, 2016

பிரச்சனைகள் தீர்வுக்கு பயிற்சி

சென்னையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம்
நிலம் வீடு மனை தவறான பட்டா மாற்றம் தவறான பத்திரப் பதிவு ரத்து செய்ய போன்ற அனைத்து பிரச்சனைகள் தீர்வுக்கு
பயிற்சி நடைபெறும்
நாள் 26-6-16 ஞாயிற்றுக் கிழமை
பகல் 2.00 மணி முதல் மாலை 6 மணி வரையில்
இடம் கும்பட் காம்ப்ளக்ஸ் 29 ரத்தன் பஜார் சென்னை தொடர்புக்கு 9445249202
தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டால் தகவல் கிடைக்கவில்லையா? தகவல் ஆணையம் சென்றும் தகவல் கிடைக்கவில்லையா?Thursday, May 26, 2016

தொழில் தொடங்க கடன் உதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

புகைப்படங்கள்
சுய தொழில் தொடங்கும் படித்த இளைஞர்கள், கடன் உதவி மற்றும் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை படித்த இளம் ஆண், பெண்களுக்கு ஒரு மாத தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்குப் பின் தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து, வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை.  மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் மற்றும் பிற வகுப்பினருக்கான வயது வரம்பு 45. இப்பயிற்சியில் பங்கேற்கும் தொழில்முனைவோர்கள்  ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உற்பத்தி அல்லது சேவை தொழிலில் முதலீடு செய்யலாம். கிண்டி, தொழிற்பேட்டையில் உள்ள தொழில்வணிகத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.   மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழு பயிற்சிக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

எங்கே செல்கின்றோம் என்று தெரியாமலே ஓடி என்ன பயன்?

நல்லவர்கள் ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வரவேண்டும். நல்லவர்கள் எதற்கு ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். சாமானியனுக்கு அரசின் திட்டங்கள் இலஞ்சம் கிடைக்கவேண்டும் அவர்களின் உரிமைகளுக்காக அலைந்து திரியாமல் கிடைக்கவேண்டும் என்று தானே. நமது உரிமையை இலஞ்சம் இல்லாமல் அலைந்து திரியாமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் நாம் பெற தகவல் சட்டம் இருக்கு
எப்படி யாருக்கு எழுதவேண்டும்? என்று தெரியாதவர்களுக்கு இந்தியன் குரல் அளிக்கும் இலவச பயிற்ச்சியில் கலந்து நீங்கள் தெரிந்துகொண்டு உங்கள் அருகாமை மக்களுக்கு உதவலாம். அரசின் திட்டங்கள் முறைகேடுகளை கண்காணித்து கேட்கலாம் தவறு நடந்திருந்தால் தண்டனைபெற்றுத் தரலாம். தகவல் சட்டம் அறிந்த ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான எதிர்கட்சியாக செயல்பட்டு அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்க எதிர்கட்சி தலைவருக்கு உள்ள எல்லா அதிகாரமும் கொண்டவனாக செயல்பட முடியும்.


தகவல் சட்டத்தின் கீழ் எல்லா அரசியல் கட்சிகளும் 
1. தங்கள் உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கேட்கும் தகவல்கள் அனைத்து அளிக்கக் கடமைப்பட்டவை 
2. கட்சியின் கொள்கை முடிவுகள் தலைமையின் செயல்பாடுகள் நிர்வாகிகள் தேர்வு வரவு செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தரவேண்டும்.

Friday, April 29, 2016

கெயில் இந்தியா நிறுவனத்தில் பாய்லர் ஆபரேஷன் மற்றும் சட்டப்பிரிவில் வேலை

கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான பணிகளை செய்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் உற்பத்தியை விரிவாக்க இருப்பதால் பாய்லர் ஆபரேஷன் இன்ஜினியர்கள் மற்றும் சட்டம் படித்தவர்கள் தேவைப்படுகின்றனர்.