ஆதரவாளர்கள்

வியாழன், 25 ஜூலை, 2013

ஒருகோடி இலக்கு 30 தினங்களில் ஒரு லட்சம் நிச்சயம்

அறிவார்ந்த நன்மக்களே!
நம் அன்றாட வாழ்வில் கொலை கொள்ளை கற்பழிப்பு கூட்டுக் கொள்ளை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது என்பதை அறிவீர்கள்.

இதற்கு காரணம் விலை வாசி உயர்வும் மக்களின் வேலையில்லாத் திண்டாட்டம் காரணம் என்று கற்றவர்கள் சொல்கின்றார்கள். அப்படி என்றால் விலைவாசி உயர்வுக்கும்  திண்டாட்டத்திற்கும் கரணம் என்ன என்று ஆராய்வதும் அதை உனடடியாக சரி செய்வதும் நம் கடமையாகிறது.
எங்கும்  எதிலும் ஊழல் என்று தினமும் ஒரு புத்திய ஊழல் அரசின் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்று பகிரங்கமாக அனைவரும் பேசுகிறார்கள். இவ்வாறு நடவாமல் தடுக்க தீர்வு என்ன என்று சமூக ஆர்வலர்கள் சிந்தித்து அதன் வழியில் மக்களுக்கு  களத்தின் கட்டாயம் உருவாகிவிட்டது.
சட்டங்களும் நீதிமன்றங்களும் சாமானிய மக்களிடம் காட்டும் கண்டிப்பு அரசியல்வாதிகளிடம் குலைந்தும் வளைந்தும் போகிறது ஆகவே அரசியல் வாதிகள் ஆளுகின்ற கட்சி ஊழல் என்றதும் கமிசனை போட்டு அதை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றார்கள் என்று சாதாரண மக்கள் பேசும் நிலை.இதற்கு விடிவே இல்லையா?
மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு மக்கள் கண்காணிப்பு தான்.  வேலை செய்கிறாரா இல்லையா என்று மட்டும் பார்ப்பது முதலாளியின் கடமை அல்ல வ்வேளைக்காரர் வேலையை சரியாக செய்கின்றாரா என்று கண்காணிப்பும் அவசியம் வேண்டுமே!
கேள்வி கேட்டால் அடிக்கின்றார்கள் தாதாக்களின் கைகள் அரசியல் வாதிகளுக்கு துணையாக உள்ளது இன்று பெரும்பான்மை அரசியல் வாதிகளே தாதாக்கள் தான் ஏன் நாடாளுமன்ற பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் தண்டனை பெற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றமே சான்றிதல் தந்துவிட்டது. இந்த நிலையில் எப்படி கண்காணிப்பது.
தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் மக்கள் கண்காணிக்கலாம் ஊழலை வெளிச்சப்படுத்தலாம். இச் சட்டத்தைப் பயன்படுத்தியதால் கடந்த காலங்களில் பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனாலும் உங்களால் வெளிச்சத்திற்கு தானே கொண்டுவர முடியும் தண்டனை பெற்றுத்தர முடியுமா நீதியும் நிர்வாகமும் எங்கள் சட்டைப்பையில் என்று திமிறி திரியும் அரசியல் முதலைகளை தண்டிப்பது எப்படி.
தகவல் சட்டம் நகராட்சி மாநகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் முறைகேடாக பதவி உயரு பெற்ற பலரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவியுள்ளது சமீபத்தில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரே சமயத்தில் 13 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசு அலுவலர்கள் தண்டனை பெற தகவல் சட்டம் உதவியுள்ளது.
இப்படி தவறு செய்த அலுவலர்கள் தாங்களாக தவறு செய்யவில்லை அதற்கு தூண்டியவர்கள் எவ்வித தண்டனையுமின்றி மீண்டும்  அதே தவறு அடுத்து வரும் அலுவலரும் செய்ய தூண்டுகின்றார். இதை எந்த அரசு ஊழியரும் சிந்திப்பதே இல்லை அவர் கொடுக்கும் கொஞ்சம் சில்லறைக்கு வாலாட்டி மகிழ்வதே அரசு ஊழியர்களுக்கு நிமதியா?
இப்படி தினமும் நடக்கும் எண்ணற்ற குற்றங்களை கூறிக்கொண்டே போகலாம் தீர்வு?
மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் இப்பொழுது தூங்கிக் கொண்டா இருக்கின்றார்கள் மக்கள் முன்னை விட அதிகம் வில்ப்புனர்வோடுதான் இருக்கின்றார்கள் இதை ஒன்றும் செய்யமுடியாது. இதை மாற்ற முயல்வது முட்டாள் தனம்.

தவறான வழியில் பொருள் சேர்க்கும் தொழில் அதிபர்களும் அரசு அலுவலர்கள் உணர வேண்டும் தாம் செய்யும் தவறு சமுதாயத்தில் அடுத்து வரும் தன்னுடைய மகன் மகள் பேரன் பேத்திகள் எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்புரிய வேண்டும். அரசு பதவி என்ன அவர்கள் பரம்பரைக்கு சொந்தமானதா நாளை அவர்களது பிள்ளைகளும் இந்த வரிசையில் தான் நிற்கவேண்டும்.
மாணவர்கள் பணக்கார இளைஞர்கள் உணர வேண்டும் தாம் செய்யும் தவறு தான் சார்ந்த சமுதாயத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று. திரைப்படமும் காதலும். சண்டே ஜாலியும் பப்பும். நேர்வழியில் சம்பாதித்த பணத்தை யாரும் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். அப்படி என்றால் இவர்களுக்கு வரும் பணம் தவறான வழியில் தானே வந்து இருக்கவேண்டும்.

 அன்றாடம் செய்தித் தாளில் பாருங்கள் கொள்ளையில் வழிப்பறியில் ஈடுபட்ட பெர்ம்பான்மையானவர்கள் மாணவர்களும் 25-35 வயது இளைஞர்கள் தானே . அவர்கள் கொள்ளை அடிக்க காரணம்? காதலும் இந்த சண்டேயும் பப்புக்கும் கிளப்புக்கும் செலவு செய்தோம் என்ற பேட்டி கட்டம் கட்டி வருகிறதே படிக்கின்றோம் சிந்தித்தோமா ?
நாம் என்ன பணம் பண்ணும் மிசினா அல்லது மனிதர்களா என்று என்றாவது சிந்தித்தோமா
நம் தேவைக்கு பொருள் இருக்கும்போது மட்டுமே நாம் ஒழுக்கமானவர்களாக நம் பிள்ளைகளை ஒழுக்கமுடையவர்களாக மனிதாபிமானம் மிக்கவர்களாக இருப்பார்கள். போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சொல்வார்கள்.
எல்லாக் குற்றங்களுக்கும் ஒழுக்கமற்ற அரசியலுக்கும் காரணி
ஒழுக்கமின்மையே ஆகவே "ஒழுக்கம் தவறேல்"

ஒழுக்கமிக்க சமுதாயம் மலர இந்த கட்டுரையை ஒரு கோடி மக்களுக்கு படிக்க வாய்ப்பளிப்பது என்பது இலக்கு வரும் முப்பது தினங்களில் ஒருலட்சம் பேர் படிக்க செய்வது நிச்சயம். இந்த சமுதாயப் பணிக்கு நீங்களும் ஒரு கிளிக்கில் பரப்புரை செய்து உதவிடலாமே! செய்வார்களா?

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எனது முகநூலில் பகிர்ந்துள்ளேன் அய்யா

VOICE OF INDIAN சொன்னது…

மிக்க நன்றி ஐயா , அரசியல் கட்சிகள் தகவல் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டு நிதி வரவு செலவு, கட்சி பதவி, தேர்தலில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட எந்த தகவலையும், பொதுமக்கள் கேட்கும் தகவலை தரவேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பு சாமானிய மக்களுக்கும், கட்சியின் உண்மைத் தொண்டனுக்கும் பயனளிக்கும் உன்னதமான தீர்ப்பு ஆகும். ஆனால் இதை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்த்கின்றன பாராளுமன்ற கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டுவருவோம் அல்லது தகவல் சட்டத்தைத் திருத்துவோம் என்று ஆணவத்துடன் பெட்டி அளித்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கும் ஆகவே உச்சநீதிமன்றம் அதை செல்லாமல் ஆக்கிவிடும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டிய தருணம் வந்துவிட்டது இதை ஒட்டிய துண்டுபிரசுரங்கள் இந்தியன் குரல் அமைப்பு வெளியிட ஏற்பாடு செய்துவருகின்றது. அதற்கான பங்களிப்புக்கு உதவும் அமைப்புகளுடன் இணைந்து பிரசுரம் வெளியிட முடிவு செய்து அதன் அடிப்படையில் முதல் கட்டமாக ஒரு லட்சம் துண்டுபிரசுரங்கள் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் நாள் வெளியிட இருக்கின்றது. மேலும் விபரம் அறிய vitrustu@gmail.com